மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு புகழாரம்!!

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ மற்றும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளது.

tnatamileelamquestionஇடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் குறித்த இருவரும் ஆற்றி வரும் சேவை அபாரமானதெனவும், அரசியல் கட்சி என்ற ரீதியில் இந்த சேவையை பாராட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு காணப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
 
கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரையில் சுமார் 100000 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் பணிகளில் பெசில் ராஜபக்ஷவும், ரிசாட் பதியூதீனும் முக்கிய பங்காற்றியுள்ளதாகவுதம், இதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்படும் போது வழங்கப்படும் உதவு தொகையை 25000 த்திலிருந்து 50000 ரூபாவாக உயர்த்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
எஞ்சியுள்ள இடம்பெயர் மக்களை துரித கதியில் மீள் குடியேற்றுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் அவசித்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் மட்டுமே தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.