ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றமதி அவிவிருத்;தி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

glperisஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பிழைகளும், பொருத்தமற்ற தகவல்களும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களை இன்றைய தினம் (06‐11‐2009) வரையில் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.