மாவோயிஸ்ட் – புலிகள் உறவு! இலங்கை இனவாதிகள் சொல்ல வரும் செய்தி என்ன? – இந்த புரளியின் பின்னணியில் “றோ”

தமிழீழ விடுதலைப்புலிகளின் நன்கு பயிற்சி பெற்ற 12 பேர் கொண்ட அணியினர் ஆந்திரா ஊடாக ஊடுருவி  மாவோயிஸ்டுக்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளதாகவும் அந்த பயிற்சியினை கொண்டே இந்திய படையினருடன் மாவோயிஸ்டுக்கள் கடும் சண்டை புரிவதாகவும் அமைச்சர் ராஜீவ விஜய சிஙக குறிப்பிட்டுள்ளார்.

question-mark1aஇதன் மூலம்  இலங்கை அரசு என்ன சொல்ல வருகின்றது. விடுதலைப்புலிகளை நிரந்தரமாகவே இந்தியாவுக்கு எதிரானவர்கள் அவர்களை நாங்கள் முறியடித்ததனால் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அழிவினை தாம் தடுத்து விட்டோம் எனவே நாங்கள் தான் இந்தியாவின் நண்பர்கள் என சொல்ல வருகின்றார்களா? தமது தமிழின அழிப்பினை இதன் மூல நியாயப்படுத்த முயல்கின்றார்களா?

அல்லது இந்தியா சண்டைபிடிப்பதற்கு கடினமாக இருக்கும் மாவோயிஸ்டுக்களுக்கு பயிற்சி கொடுத்தவர்களையே நாம் முடித்து விட்டோம் ஆகவே இலங்கை படையினர் தான் இந்திய படையினரை விட திறமானவர்கள் என சொல்ல முனைகின்றார்களா?

எது எப்படி இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்களும் தேவை இல்லாமல் மற்றைய இனங்களுக்குள்ளும், நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்கும் நிலையிலான கொள்கையில் இல்லை. இதில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் உறுதியாக இருந்தார்.

அரசியல் ரீதியாக உயர்மட்ட ரீதியில் தமிழீழ தேசிய கொள்கைக்கு ஆதரவு தேடும் முறையிலேயே விடுதலைப்புலிகளின் உறவுகள் இருந்ததே தவிர மற்றையவர்களின் உரிமைகளில்,  நாடுகளில் குழப்பங்களை  ஏற்படுத்தும் நடவடிக்கையில் அவர்களது கொள்கை இருக்கவில்லை.

உதாரணமாக சமாதான காலகட்டத்தில் நிறைய நாடுகளும், நாடுகளின் முதலீட்டாளர்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் வந்து போயினர். ஆனாலும் விடுதலைப்புலிகள் பேச்சுவார்தைகளில் பங்கெடுத்து வந்த நாடுகள் அத்துடன் நேர்மையாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வார்கள் என நினைக்கும் நாடுகள், கொடையாளர்கள், சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் ஆகியவற்றையே கூடுதலாக அணுகி இருந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் இந்த நேர்மையான அணுகுமுறைகளே அவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்தது எனலாம். அத்துடன் இந்தியாவுடன் சேர்ந்து போகவேண்டும் அல்லது ஆக குறைந்தது அவர்களின் ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தையினை நடாத்துவோம் என்ற கொள்கை விடுதலைப்புலிகளிடம் இருந்தது ஆகவே தான் பேச்சுவார்த்தைக்கான இடமாகவும் அத்துடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தாயகம் நோக்கி வருவதற்கான பயண ஏற்பாட்டினை இந்தியாவுக்கு ஊடாக செய்வதற்கும் முதல் முதலாக இந்தியாவுடனேயே பேசப்பட்டது.

ஆகவே இந்தியாவிற்குள் அரசியல் இராணுவ நெருக்கடிகள் ஏற்படுத்துவதனை விட இந்தியாவின் ஆதரவினை பெறுவது என்பதில்தான் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியாவும் இலங்கையும் தமது இயலாத்தன்மை அல்லது நிரந்தரமாகவே இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தகாலத்திலும் உறவு ஏற்படக்கூடாது என்ற ரீதியில் திட்டமிட்டு செயற்படுத்தும் நாடகமே மாவோயிஸ்ட்- புலிகள் பிரச்சாரமாகும். அதில் இந்தியா ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றது எனலாம்.

எனினும் தாயகம் தன்ஆட்சி தொடர்பான கொள்கை ரீதியான முறியடிப்பில் இந்தியாவுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்க போவதில்லை ஏனெனில் இந்த விடயம் இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கட்டுப்பாடுகள் , வரம்புகள் ஆகியவற்றை மீறி நீண்டகாலம் ஆகி விட்டது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில், எதிர்கால சந்ததிகள் மத்தியில் இவை பதிந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.