தமிழ்த் தேசியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கே உள்ளது

தமிழ்த் தேசியத்தின் தாற்பரியத்தை விளங்கிக்கொண்டவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள். தமிழ்த் தேசியத்தை ஒரு கட்டத் திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பொறுப்பும் பல்கலைக்கழக மாணவர்களிடமே உள்ளது என்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

Jaffna+Universityகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுத் தற்போது யாழ்ப் பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் மாணவர் களுக்கு “பொஸ்டோ’ நிறுவனத்தின் பண உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

தமிழர் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் சமூகத்திற்கு வழிகாட்டியாக விளங் கியவர்கள்.ஆனால் தற்போது இம்மாண வர்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங் களைச் சுமந்துகொண்டு தமது கல்வியைத் தொடர்கின்றனர். மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காகத் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை  என்றார். பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பண உதவித் தொகையை வழங்க உதவிய “பொஸ்டோ’  நிறு வனத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் செல்வி ஜெயந்தா உரை நிகழ்த்தும்போது, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு உதவி செய்யுமாறு எமது நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் காரணமாகவே நாம் இந்தப் பண உதவியை வழங்க முன்வந்தோம். இப்பண உதவி வழங்கியதுடன் எமது இத் திட்டம் நிறைவு பெற்றது என்பதல்ல. தொடர்ந்தும் உதவித்திட்டங்களை வழங்கத் தீர்மானித்திருக்கிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.