அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை அகற்றிவிட்டு அதனை சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அந்த முகாம்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்வதற்கு அனுமதிக்குமாறும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது.

srilanka-governmentஇந்த யோசனையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெனி டேவிஸ் சில வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் செலவில் இலங்கைக்குச் சென்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் சுற்றுப் பயணம் செய்ததாகவும் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியவந்திருப்பதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.