இந்த உலகமே திரண்டு வந்து என்னை கேட்டாலும் என் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டேன் – சரத் பொன்சேகா

அமெரிக்க அரசாங்கம் தன்னிட்ட விசாரணை நடத்த முயற்சித்த போதும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்காது தன்னால் எதனையும் கூறமுடியாது என தான் கூறியதாக கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

sarath-ponseka-_srilankaஅரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறித்து அறிவதே அமெரிக்க அதிகாரிகளின் நோக்கம். எனினும், அவர்களின் கோரிக்கையை தான் நிராகரித்ததாக பொன்சேக்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறித்து எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கேள்வியொன்றுக்குப் பதிலளித்துள்ள சரத் பொன்சேக்கா, அரசியலில் ஈடுபட இந்த நாட்டிலுள்ள எவருக்கும் உரிமையுள்ளது. அதுகுறித்து கேள்வியெழுப்ப எவருக்கும் உரிமையில்லை எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் திணைக்களம் கடந்த 4ம் திகதி பொன்சேக்காவிடம் விசாரணை நடத்தவிருந்த போதிலும், அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அதனைக் கைவிட்டுள்ளது. அரசாங்கம் பொன்சேக்காவை இலங்கைக்கு வருமாறு அறிவித்ததை அடுத்து அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய பொன்சேக்காவை டளஸ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் இலங்கைக்குச் செல்ல உதவியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.