விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இன்னமும் செயற்பட்டு வருகின்றன – ரட்னசிறி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சக்திகள் இன்னமும் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
உலகில் இரண்டு பிரிவினர் தற்போது வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sri Lankan Prime Minister Ratnasiri Wickramanayakeஓர் நாட்டினது இறைமையையும் சுய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற தரப்பும், தாங்கள்தான் உச்ச அதிகாரமுடையவர்கள் என ஏனைய நாடுகள் மீது அழுத்தம் செலுத்தும் மற்றொரு தரப்பும் உலகில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த இரண்டாம் தரப்பு நாடுகள் ஏனைய நாடுகளின் சுதந்திரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்த வீரர்களின் அபரிமிதமான தியாகம் காரணமாகவே இன்று நாடு சுதந்திர மூச்சுக் காற்றை சுவாசிக்க வழிகோலியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
 
தங்களது உயிர் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ படைவீரர்கள் ஓருபோதும் கவலைப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சிலர் இவற்றை மறந்து செயற்பட்டு வருவதாக பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இவ்வாறான நபர்களே சம்பள உயர்வுப் போராட்டங்களை நடத்தி நாட்டை இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்ல முனைப்பு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தொழிற்சங்கப் போராட்டங்களின் மூலம் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.