தடுப்பு முகாம்களில் மழை வெள்ளம் மீண்டும் அவலம்

கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வலயம் 3- 5 இல் உள்ள  இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Image001இதே நேரம் பொது கட்டடங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதனால் அதனையும் பாவிக்க முடியாமல் உள்ளது. குறிப்பாக கிடுகுகளலான கட்டடங்களிற்கு மழைகாலத்தினை கருத்தில் கொண்டு தகரங்கள் போடப்பட்டதாகவும் ஆனால் நிலம் மழை நீரில் ஊற்ப்போய் இருப்பதால் தறப்பாள் விரித்தே இருக்கவேண்டிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் சிறார்கள் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பெரும்பாலான மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கல்விக்கூடங்கள், பொது மண்டபங்கள் என்பவற்றில் பொழுதைக் கழிக்க நேர்ந்துள்ளதாக  தெரிவிக்கப் படுகின்றது. முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மழையென்றும் பாராமல் இரவோடு இரவாக மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குரிய மாவட்டங்களின் பொது இடங்களில் இறக்கி விடப்படுகி்ன்றனர். இதன்போது மழை காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.