ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை அறிக்கைக்கான பதில் அறிக்கையினை நேற்று இலங்கை சமர்ப்பித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மீதான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் அடங்கிய விசாரணை அறிக்கைக்கான பதில் அறிக்கையினை நேற்று மாலை இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாம அவர்களினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதரிடம் கையளிக்கப்பட்டது.

srilanka-governmentஇந்த பதிலறிக்கைக்கான முடிவு காலம் நவம்பர் 6 என்பதனால் நேற்று அந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த, மற்றும் நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழுவினரால் கையொப்பமிடப்பட்டு அனுப்பபட்டுள்ளது. இந்த அறிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் பிரதி நிதிகளுக்கு இலங்கையின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி தனித்தனியான கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கும் தனியான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் அதே நேரம் ஜி.எஸ்.பி வரிசலுகை பெறவேண்டிய சூழல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.