செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு ஒரு மாதகால தடுப்புக்காவல் உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத்தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் கைது செயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

tna_mp_telo_selvam2கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் நேற்றுமுன்தினம் நாடு திரும்பியிருந்தார். அவரிடம் விமான நிலையப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் காலை விசாரணைக்காக அவரை அழைத்தனர். 8 மணிநேரம் நடைபெற்ற வசாரணைகளின் பின்னர் அவர் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் நேற்றுக் காலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் காலை 8 மணியளவில் அங்கு சென்றவேளை தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார் என அறியமுடிகின்றது. வவுனியா ரெலோ அலுவலகத்தில் “மைக்ரோ பிஸ்ரல்” ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.