குடா நாட்டு மக்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டனர்! யாழ் அரச அதிபர்

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை 18,628 குடும்பங்களைச் சேர்ந்த 58,296 பேர் குடா நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று யாழ் அரச அதிபர் கூறியுள்ளார். திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தங்கியிருந்தவர்கள் தொடர்பாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் நேற்றுடன் அழைத்துவரப் பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Ga_ganeshஅத்துடன் பிரதேச ரீதியில் மக்களைக் குடியமர்த்த பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் யாழ். அரச அதிபர் நன்றி கூறியுள்ளார். இதேவேளை உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 1,114 குடும்பங்பளைச் சேர்ந்த 3,588 பேர் நேற்று அழைத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.