தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்: சீமான்

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் முள்வேலி கம்பிகளுக்குள் சிறைபடுத்தி உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கும்படி மதுரை மற்றும் தூத்துக்குடியில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தினோம்.

seeman1_inஇங்கே எப்படி இப்போது வடகிழக்கு பருவ மழை பெய்கிறதோ, அதே போல் இலங்கையிலும் மழைபெய்து வருகிறது. 2 நாள் மழைக்கே முகாம்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இவ்வளவு பெரிய இந்திய நாட்டில் அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் வாழும் நமக்கே சிக்குன்குனியா, மலேரியா, காலரா, டெங்குகாய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. ஆனால் இலங்கையில் சுகாதாரமற்ற முறையில், திறந்த வெளி பொட்டல் காட்டில் உள்ள எங்கள் தமிழ் மக்கள் எல்லோரும் நோய் ஏற்பட்டு மடியும் அபாயம் உள்ளது.

எங்கள் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துகிறோம் என்று இலங்கை அரசு சொல்வதெல்லாம் பொய். எங்கள் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்.

தமிழர்களின் மேம்பாட்டுக்காக இந்தியா இதுவரை இலங்கைக்கு வழங்கிய நிதி உதவியை சிங்கள அரசு என்னசெய்தது? சுதந்திரம் என்று போராடிய மக்களை சோற்றுக்காக கையேந்த வைத்தது. அந்த மக்களில் இருந்து தானே புலிகள் உருவாகிறார்கள் என்று அவர்களை முள் வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.