இலங்கையில் பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்பான முதலாவது உயிரிழப்பு சம்பவம்

இலங்கையில் பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றுக் காரணமாக உயிரிழந்த முதலாவது நபர் கண்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
 
பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட 16 வயது இளைறுர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SwineFlu3உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் இருவரும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எச்1என்1 என்ற பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
எவ்வாறெனினும், பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த இளைறுர் வேறும் உபாதைகளினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் இவை நோயத் தொற்று இலகுவில் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.