ஜெனரல் சரத் பொன்சேகா பதவியை இராஜினாமா செய்து, அரசியலில் களமிறங்கக் கூடும்?

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தமது பதவியை இராஜினாமா செய்யக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எதிர்வரும் 10ம் திகதி தமது பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SarathFonsekaஅமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போது ஊடகங்களைச் சந்திப்பதற்கு சரத் பொன்சேகாவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
மேலும், அண்மையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், சரத் பொன்சேகாவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சுமூகமான உறவு காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடக் கூடும் என்ற கருத்து வலுவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர மற்றும் சோமவன்ச அமரசிங்க ஆகியோர் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.