விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான சகல சர்வதேச சொத்துக்களும் அடுத்த சில தினங்களில் இலங்கை அரசாங்கம் சுவிகரித்து கொள்ளும்: திவயின கூறுகிறது

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான சகல சர்வதேச சொத்துக்களும் அடுத்த சில தினங்களில் இலங்கை அரசாங்கம் சுவிகரித்து கொள்ள எண்ணியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

gotabhaya_rajapaksa_01-300x225விடுதலைப்புலிகள் கடந்த 30 வருடங்களாக சர்வதேச ரீதியில் சம்பாதித்துள்ள கப்பல்கள், கட்டிடங்கள், காணிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அவர்கள் சகல அசையும் அசையா சொத்துக்களையும் இவ்வாறு அரசாங்கம் கையகப்படுத்த போவதாகவும்  இதற்காக சர்வதேச ரீதியில் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். 

புலிகளின் சர்வதேச தலைவர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் புலிகளின் சர்வதேச சொத்துக்கள் குறித்து விபரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.