மட்டு ஏறாவூரில் முஸ்லிம் இளம் குடும்ப பெண் வெட்டிக் கொலை

மட்டகளப்பு மாவட்டம் ஏறாவூரில் மீராக்கேணியைச் சேர்ந்த செய்யது மொகமது ரபீனா (வயது 35) என்ற இளம் குடும்ப பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் சடலம் இன்று காலை தாமரைக்கேணி என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Muslimkillஇவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேகிக்க படுகின்றது. மேற்படி பெண்ணின் கணவர் வாகன விபத்தில் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இறுதியாக இப்பெண் நேற்று முன் தினம் கணவனைப் பார்க்கச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.