சிங்கள வக்கீலின் காமப் பசிக்கு 15 வயது தமிழ் சிறுமி பலியாகியுள்ளார்

அதிகாரபூர்வமற்ற முன்னாள் குற்றவியல் நீதிபதியும், வழக்கறிஞருமான வில்சன் ஜெயவர்த்தன தனது வீட்டில் வேலைக்கு இருந்த 15 வயது தமிழ்ச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். இதுகுறித்த முறைப்பாடு சிறுவர் பாதுகாப்பு சபைக்குக் கொடுக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மாத்தறை போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு கொடுக்கப்பட்டது.

nerudal-tamil-news1ஆனால் சில நாட்கள் ஆர்ப்பாட்டமாக திரிந்த போலீசார் அந்த முறைப்பாட்டை கிடப்பில் போட்டுவிட்டனர்.

வில்சன் ஜெயவர்த்தன இவ்வாறு பல சிறுமிகளைக் கற்பழித்துள்ளதாகவும், ஆனால் அவர் ஒரு வக்கீலாக இருப்பதால் அவருக்கு எதிராக புகார் கொடுக்க பலரும் பயப்படுவதாகவும் இப்போது தெரியவந்துள்ளது. இப்போது முறைப்பாடு கொடுத்துள்ள தமிழ்ச்சிறுமி வில்சனின் அலுவலகத்தில் வேலை பார்த்ததாகவும் ஆனால் வில்சனின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சிறுமிக்கு மதுவைக் கொடுத்து அவர் நினைவிழந்திருந்தபோது வில்சன் கற்பழித்துள்ளார். சிறுமி நினைவுக்கு திரும்பியபோது தாம் கற்பழிக்கப்பட்டிருப்பதையும் தமது கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி காணாமல் போனதையும் அறிந்துள்ளார்.

இப்போது மாத்தறை போலீசாரால் கைது செய்யப்பட்ட வில்சனை சிறுவர் பாதுகாப்பு சபையினர் தாம் விசாரணை செய்வதாக பொறுப்பேற்றுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.