விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி தாக்குதல்: ‘லக்பிம’

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘லக்பிம’ வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ‘லக்பிம’ வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட அணி, முதலாவது சிங்க றெஜிமென்ட் பற்றலியன் நிலைகொண்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சமர் மூண்டது.

இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன் பின்னர், அந்த அணியில் இருந்த கரும்புலி வீரர் ஒருவர் 11 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி மேஜர் திசந்த பெர்னாண்டோ பயணம் செய்த ஜீப் ஊர்தி மீது தாக்குதலை நடத்தினார்.இத்தாக்குதலின் போது வாகனத்தின் சாரதி கொல்லப்பட்டார். ஆனால், கட்டளை அதிகாரி அந்த வாகனத்தில் பயணம் செய்யாததால் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.