குமரன் பத்மநாதன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என இராணுவ வட்டாரத் தகவல்கள் மறுப்பு வெளியிட்டுள்ளன.

question_3d1பணாகொடை இராணுவ முகாமில் குமரன் பத்மநாதன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
சித்திரவதைகள் இடம்பெறவில்லை எனவும், பணாகொடை இராணுவ முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் குமரன் பத்மநாதன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குமரன் பத்மநாதன் நீரிழிவு மற்றும் இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.