சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 329 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் உதவியின் இரண்டாம் தவணைக்கான கடன் உதவியை இலங்கைக்கு வழங்க நிதியத்தின் நிறைவேற்று சபை கடந்த 6ம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.

imf_loanஇதனடிப்படையில், 329 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினத்திற்குள் இலங்கையின் கணக்கில் வைப்பிலிடப்படும் என பிரதி நிதியமைச்சரும், அரச வருவாய்த்துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கடன் தவணை கிடைத்த பின்னர்  இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பானது ஐந்து மில்லியனைத் தாண்டும் எனவும் இது வரலாற்றில் பதிவாகும் அதிக எண்ணிக்கையிலான அந்நிய செலாவணிக் கையிருப்பாகும் எனவும் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாவது கடன் தவணைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அது இலங்கை மத்திய வங்கியின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் அதிகரிப்பதுடன், இலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணியும் அதிகரிக்கும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ள 2.6 பில்லியன் கடன் உதவியை ஆறு தவணைகளாக வழங்கவுள்ளதுடன், மேலும் ஆறு தவணைகள் இந்தக் கடனுதவி கிடைக்கவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.