தடுப்பு முகாம்களில் விடுதலைப்புலிகளின் துண்டு பிரசுரங்கள்! – மக்களை தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதற்க்கான இலங்கை இனவாதிகளின் சதியா??

தமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும், அவர் தலமையில் போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து யாரையும் செயற்படவேண்டாம் எனவும் வாசகங்களில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

questionskvoor090500048இந்த துண்டுபிரசுரங்களை கண்டபின்னர் அங்கு விடுதலைப்புலிகள் இன்னமும் இருக்கலாம் என பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றதடுப்பு பொலிஸ் பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியன சேர்ந்து தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களிற்கிடையே  மீண்டும் தரப்படுத்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் அங்கிருந்து நேற்று முந்தினம் இராம நாதன் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு மன்னாரிற்கு வந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கையில்  இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் ஆனால் இவை இராணுவ புலனாய்வு பிரிவினரின் வேலையாக தான் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஏனெனில் இராணுவ புலனாய்வு பிரிவினர் சில முன் நாள் உறுப்பினர்களையும், பயிற்றப்பட்ட தமிழர்களையும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக கதைத்து மக்களிடம் தகவல் பெறுவதற்கு உகாம்களுக்குள்ளேயே அனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் கூறினார்கள்.பின்னர் அவர்களால் பலர் அடியாளம் காணப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.