இடம்பெயர் முகாம்கள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது – ஐ.நா

இலங்கையில் இடம்பெயர் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, இடம்பெயர் முகாம்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

unகடந்த இரண்டு வாரங்களில் சுமார் 39000 பேர் வடக்கு கிழக்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் அன்ட்ரேஜ் மாஹாகிக் தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர் முகாம்களில் சுமார் 163000 பேர் தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இடம்பெயர் முகாம்களின் நிலைமை திருப்தி அடையக் கூடிய வகையில் அமையப்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
சர்வதேச நியமங்களுக்கு அமைவான முறையில் மக்கள் சுதந்திரதமாக இடம்நகரக் கூடிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.