அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் சமாதானத்தை வென்றெடுக்க அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் ‐ அவுஸ்திரேலியா

காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றின் மூலம் சமாதானத்தை வென்றெடுக்க இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
 
யுத்தம் வெற்றிகரமாக நிறைவடைந்த மாத்திரத்தில் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

australiaflagநாட்டிலிருந்து வெளியேறும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுத்து நிறுத்த சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
 
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
தற்போது இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்படடுள்ள, அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற 78 இலங்கைச் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது
 
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.