இலங்கையில் குழப்பமான சூழ்நிலை இன்னும் நீடிக்கிறது – இந்தியாவில் ரணில்

இலங்கையில் குழப்பமான சூழ்நிலை இன்னும் நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்க சென்னையில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில்விக்ரம சிங்க, கொழும்பில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சென்றடைந்ததுடன்  பின்னர் அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ranilமுன்னதாக சென்னை விமான நிலையத்தில் ரணில்விக்ரம சிங்க ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார்.

கேள்வி:‐ டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன?
 
பதில்:‐ இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து பேச செல்கிறேன்.
 
கேள்வி:‐ இலங்கை அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?
 
பதில்:‐ இலங்கையில் உள்ள அகதி முகாம்களில் இருந்து இரண்டரை லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு சொந்த பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டதாக சர்வதேச நிறுவனம் கூறுகிறது. இது கடந்த அக்டோபர் மாதம் 30‐ந் தேதி உள்ள நிலை. தற்போதைய நிலைமை பற்றி எனக்கு தெரியாது.
 
கேள்வி:‐ இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரம் பற்றி?
 
பதில்:‐ இலங்கையில் குழப்பமான சூழ்நிலை தான் உள்ளது.
 
இவ்வாறு ரணில்விக்ரம சிங்க கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.