தமிழீழம் பெற்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை இனவாதிகளுடன் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டுள்ளது – இவர்களை வரலாறு மன்னிக்குமா??

வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

tnatamileelamquestionஇன்று (09.11.2009)  மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர்.
 
இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சுசில்பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வின் போது கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தமக்கு திருப்தியளிப்பதாகவும், இதனால் தமது மக்களின் நலனுக்காகவும், அப்பகுதியின் அபிவிருத்திக்காவும் தாங்கள் லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டதாக, மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 
இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தாங்கள் செயற்படவுள்ளதாக தெரிவித்த அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே இக்கட்சியில் இணைந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.