வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புத் தொடர்பாக பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை

வட்டுக்கோட்டை தீர்மானம்?

தமிழன் தமிழனாக நின்று  ஆங்கிலேய, சிங்கள காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற 28 வருட இனவெறி ஆட்சியின் கொடூரப்பிடியிலிருந்து 28 வருட ஆட்சிப்போராட்டத்திற்கு பின் தந்தை செல்வாவின் தலைமையில் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒண்றிணைந்து எடுக்கப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டை தீர்மானம்! தமிழர் மனதில் வட்டுக்கோட்டை என்ற சிறு நகரம் சரித்திரத்தில் அதன் பெயர் நிலைநாட்டப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்கு அடுத்து வரும் தலைமுறையினர் சுதந்திரமாக ஒரு தேசிய இனமாக தமது பாரம்பரிய தாய்நிலத்தில் தன்னாட்சியுடன் சுபீட்சமாக வாழ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகார பூர்வமாக அங்கீகரித்தார்கள்.

tamileelam1இன்று மீண்டும் ஏன் வட்டுக்கோட்டை தீர்மானம்

1977ம் ஆண்டு நடைபெற்ற ஐனநாயக வாக்கெடுப்பு தான் இலங்கையில் தமிழ் இன மக்கள்  பேச்சுச்சுதந்திரமும் தமது எதிர்காலத்தை தீர்மனிக்க கூடியதான சுதந்திரத்துடன் வாக்களித்த வாக்கெடுப்பாகும். அதன் பிறகு பயங்கரவாத தடைச்சட்டம், 6ம் இலக்கச்சட்டம் என்று எமது பேச்சுரிமைகளை  சுதந்திரங்களை அடக்கும் சட்டங்களாகவே அமைந்தன 2001 2004 வாக்கெடுப்புகளில் எமது மக்கள் தாம் 1977ம் ஆண்டு தீர்மானததற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்ததாலும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியோ  அதன் பிறகு உருவான தமிழ் தேசிய கூட்டமைப்போ வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிருத்தி தமிழர் அபிலாசைகளை பாராளுமன்றத்தில் பேச முடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். ஆனால் மக்களோ அந்த தேசிய அபிலாசைகளை மனதில் வைத்துத்தான் வாக்களித்தார்கள்.

வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை  நாம் போராடிய போராட்டம் உலக அரசியல் வலையோட்டத்தில் பின்னப்பட்டு, மீண்டும் உலக சரித்திரத்தில் ஒரு இனப்படுகொலைக்கு பிறகு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று இந்த உலகிற்கு எமது மக்களின் சுதந்திர அபிலாசைகளை எடுத்து கூறவும் ஆதங்களுடன் சமர்பிக்கும் உரிமையும் எமக்கு இருக்கின்றது. உலக நாடுகள் தமது அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனமக்களின் ஐனநாயக அபிலாசைகளை பயங்கரவாதமாக்கி தமிழர்களை அடிமைகளாக்கியிருக்கின்றது. இவ்வுலகம் அரசியலை இறந்தவர்களின் உடல்களில் இருந்துதான் நடாத்தியிருக்கின்றார்கள். இது சரித்திர உண்மைகள்

கிட்லர் ஜெர்மனியில் யூத இனமக்களை கொலை செய்ய ஆரம்பிக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த League de Nation ( UNO ஆரம்பிக்கும் முன் இருந்த அமைப்பு, UNO 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்டது) ஒரு கொடூரமான இனப்படுகொலைக்கு பின் தான் யூத மக்களுக்கு ஒரு நாடு அவசியம் என்ற தீர்மானித்து 2ம் உலக மகாயுத்ததத்திற்கு பின் தான் உருவாக்கப்பட்ட ஐநா வால் அங்கீகரிக்கப்பட்டது.

அதே போல யூக்கோசிலாவாக்கியாவில், பொசினியாவில், மக்களின் இனப்படுகொலைக்கு பின் பொசினியாவும், கொசோவாவில் 10000 மக்களின் படுகொலைகளுக்கு பிறகு இதர பல்கன் (Balkan) நாடுகளும் உருவாக்கப்பட்டது. இதில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது ஆர்மேனிய (Armenia) நாடும் மிகப்பயங்கரமான இனப்படுகொலைக்கு பின்தான் 1918ம் ஆண்டு உருவானது. ஆர்மேனிய மக்களும் யூத மக்களும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தான் தமது தாயகத்தை உருவாக்கினார்கள். இன்று எம்மைப்போல் இன்னொரு இனமும் இதே இனப்படுகொலைக்கு ஆளாகி 60 வருடங்களுக்கு மேலாக தமது தாயகமாக இருந்த பாலஸ்தீனத்தில் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். லட்சக்கணக்கான பாலஸ்தீனமக்களும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் எம்மைப்போலவே அண்டை நாடுகளில் அகதிகளாக இருக்கின்றார்கள். பாலஸ்தீன நாடு ஒன்று உருவாவது அவசியம் என்று இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது. இவ் நாடுகள் உருவாவதற்கு அங்கீகாரம் பெறுவதற்கும் காரணம் அந்த நாட்டு மக்கள் புலம்பெயர் நாடுகள் புலம் பெயர்க்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் தமது மனவுறுதியை இழக்காமல் தமது நியாயத்தை எடுத்துக் கூறிய படியால்தான்  இன்று உலகநாடுகள் எமது மக்களுக்கு 13ம் சட்டத்தின் கீழ் தீர்வுகாணுங்கள், மாகாணசபை, Regional council அமையுங்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து எம்மை தொடர்ந்து படுகொலை செய்யும் ஆதிக்கவாதிகளின் கீழ் வாழுங்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் தம்மை புத்திஐPவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் சிலரும் பணத்திற்காகவும், பதவிக்காகவும், விலைபோனவர்களும், இனி தமிழும் வேண்டாம் ஈழமும் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கையில் தியாகங்களையும், உயிர் உடமைகளையும் அர்பணித்த எம் மக்கள் மீண்டும் அடிமை சாசனம் எழுத தயாரா?

1977ம் ஆண்டு சுதந்திரமாக எமது அபிலாசைகளை நாம் எடுத்துக்கூறியது போல மீண்டும் சுதந்திரமாக இலங்கையில் ஈழத்து தமிழர்களாய் வாக்களித்து தமது அபிலாசைகளை எடுத்துக்கூறும் உரிமை கிடைக்கும் வரை, அங்கே அவர்கள் சுதந்திரம் உள்ளவர்களாய் 1977ம் ஆண்டுக்கு பின் தமிழ் அடக்கு முறை கொண்டு வரப்பட்ட சட்டங்கள் மீளப் பெறப்படும் வரை, அங்கே எமது மக்கள் சுதந்திரமாக பேசவோ, உரிமைகளுக்கு குரல் கொடுக்கவே முடியாது.

உலக நாடுகள் அந்த நிலையை உருவாகும் வரை, அந்த நாட்டில் எமது மக்களுக்கு குரல் நாம் தான். அவர்கள் உரிமைகளுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் நாங்கள். அதே நேரத்தில் எமது போராட்டம் புலம் பெயர்ந்த மக்களின் கைகளில் கையளிக்கப்பட்ட அதே நேரத்தில் அடுத்த தலைமுறையினர் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது முன்னோர்கள் காட்டிய வழியில் இவ் உலகத்திடம் வலியுறுத்த முற்பட்டிருக்கின்றார்கள். இன்று மக்களாகிய நாங்களே எம் தாய் மண்ணின் மக்களின் உரிமைகளை நியாயப்படுத்தவும் எடுத்துக்கூறவும் வேண்டிய நிலையில் எமது மக்களின் குரலாய் நாம் மாறுவோம்.

இதே வட்டுக்கோட்டை தீர்மானத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த நாம் முன்னுதாரனமாக இருப்போம். இது காலத்தின் தேவை.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.