ஜி.எஸ்.பி வரி சலுகையினை பெறுவதற்கு இலங்கை இரகசியமாக பேச்சுக்களை நடத்தி வருகின்றது

இலங்கை  ஜி.எஸ்.பி வரி சலுகையினை பெறுவதற்கு பல்வேறு வழிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் அரசுக்கு விசுவாசமான இராஜ தந்திரிகள் மற்றும் ஒரு முக்கிய அரச சார்பற்ற நிறுவனம் உட்பட பலர் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

european-central-bank_1292இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் உத்தியோகப் பற்றற்ற இராஜதந்திரப் பேச்சுகள் நடை பெறுகின்றன. அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உத்தியோகப்பற்றற்ற பேச்சுகளை உறுதி செய்துள்ள இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இந்தப் பேச்சுகளின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் “ஜி.எஸ்.பி.” குறித்த பேச்சுகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரியொருவர் கடந்த வாரம் கொழும்பு வந்தார் எனத் தமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஆடைத்தொழில்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அரசு மனித உரிமைப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை  நாடியுள்ளதாக அறிகிறோம் என்றும் அந்த தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அரசசார்பற்ற அமைப்பொன்றின் பிரதிநிதியொருவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு எம்மைக் கேட்டுக்கொண்டார். எனினும் அது இடம்பெறவில்லை. அவர் அரச அதிகாரிகளை மாத்திரம் சந்தித்தார் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகம், தனது பிரதி இயக்குநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை உறுதி செய்துள்ள போதிலும் அவர் “ஜி.எஸ்.பி.”தொடர்பான பேச்சுகளுக்காக வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் தமது பிரதிநிதியொருவரின் வருகை குறித்துக் கருத்துக்கூற மறுத்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.