புலம்பெயர் தமிழீழம் அனுப்பி வைத்த “வணங்கா மண்” இன்று எம் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது

வணங்கா மண் கப்பலில் சென்ற  பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த வணங்கா மண் என்ற கப்பல் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

vanangamannஅதன் பின்னர் திருப்பி அனுப்ப பட்ட இந்த கப்பல் தமிழ் நாட்டில் நங்கூரமிடப்பட்டது மடுமன்றி இந்திய தலையீட்டினை கோரி இருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு அமைவாக மீண்டும் செஞ்சிலுவை சங்கம் ஊடாக இலங்கைக்கு அனுப்ப பட்டது.

இதன் பின்னர் இலங்கை அரசின் பல்வேறு நொண்டி சாட்டுக்களால் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட இந்த பொருட்கள் தற்போது வழங்கப்படும் நிலையினை எட்டியுள்ளது.

இந்நிலையில், மெனிக்பாம் நிவாரண முகாமின் நான்காம் வலயத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்களை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.