ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் – ஜே.வி.பி

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்யதியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

jvp-logoமகிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்கு முரணான வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவரை உடனடியாக ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒருவரையே தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் என்றும் ரில்வின் சி;ல்வா தெரிவித்துள்ளார்.
 
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.