நாம் தடைகள் எதையும் விதிக்க மாட்டோம் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கும் திட்டமெதுவும் இல்லை  என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

eu-power_1484848cமனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், குறித்த சலுகைத் திட்டம் மறுக்கப்பட்ட போதிலும் அதனை அடிப்படையாகக் கொண்டு தடைகள் விதிக்கப்படாது எனவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வ பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.