தனித் தமிழீழ கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது – பிரித்தானிய தூதுவர்

இலங்கையில் தனிநாட்டு கோரிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்காது என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டெஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

des-browne_1அரசாங்கத்துடன் இணைந்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் தனிநாட்டு கோரிக்கைக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எல்லைகடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கத்திற்கு டெஸ் பிறவுணின் கருத்து பெரும் சவாலாக அமையக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ் புலம்பெயர் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கான மத்தியஸ்தத்தை தம்மால் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும் தனித் தமிழீழ கோரிக்கை நடைமுறைச் சாத்தியப்பாடற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படக் கூடிய சாத்தியம் வெகு குறைவாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.