நாட்டை சீர்குலைப்பதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டை சீர்குலைப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
ஆயிரக் கணக்கான உயிர்களை தியாகம் செய்து விடுவிக்கப்பட்ட இந்த நாட்டை காட்டிக் கொடுக்க அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

mahinda-rajapaksha-2008-11-6-10-9-3ருவான்புர தொழில்நுட்பக் கல்லூரி அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சில சக்திகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இளைஞர்கள் எவருடைய கைக்கூலியாகவும் செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
சில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாப நோக்கங்களுக்காக இளைஞர் யுவதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்தும் துரதிஸ்டம் அரங்கேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த வீரமிக்க படைவீரர்களை கௌரவத்தை பாதுகாக்க சகல வழிகளும் பாடுபட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
புத்தி சாதூரியமாக செயற்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டை அபிவிருத்தி செய்யும் தமது முயற்சிகளில் இளைஞர்கள் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.