இலங்கை முகாம் பற்றிய அறிக்கை 12ஆம் திகதி ஆய்வு: கருணாநிதி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் பற்றிய அமைச்சர்களின் ஆய்வறிக்கை மீது எதிர்வரும் 12ஆம் திகதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

karunanithyஅங்குள்ள அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த 2ஆம் திகதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், அகதிகள் முகாமை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து, இம்மாதம் 10ஆம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர்.

முதல்வரின் உத்தரவுப்படி இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் இலங்கை அகதிகள் முகாம் பற்றிய ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் பற்றிய அமைச்சர்களின் ஆய்வறிக்கை மீது எதிர்வரும் 12ஆம் திகதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.