சரத் பொன்சேகா தனது பதவியியை இராஜினாமாச் செய்தால் அதனை தான் ஏற்றுக் கொள்ள தயார்

ஸ்ரீலங்காவின் முன்னாளர் இராணுவத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதானியுமான சரத் பொன்சேகா தனது பதவியியை இராஜினாமாச் செய்தால் அதனை தான் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahinda2தற்போது பாதுகாப்பு படைப்பிரிவின் முக்கிய அதிகாரியாகவுள்ள சரத் பொன்சேகா தனது பதவியியை இராஜினாமாச் செய்யாத நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சரத் பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் பட்சத்தில் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர் அந்த பதவியில் இருந்து விலக முடியும்.
 
எனினும் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கில் அவரின் பதவி விலகல் கடிதத்தை மகிந்த ராஜபக்ச ஏற்க மறுக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
 
சுரத் பொன்சேகா பதவி விலகினால் அதனை தான் உடனடியாக ஏற்றுக் கொள்ள தயராகவிருப்பதாக மகிந்த ராஜபக்ச தற்போது அறிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.