விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை

அவுஸ்திரேலிய நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தடைவிதித்து உண்மையான அகதிகளையும், பொருளாதார நோக்கோடு அங்கு நுழையும் நபர்களையும் தெளிவாக வேறுபடுத்த வேண்டும் என இலங்கை வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க கூறுகிறார். விடுதலைப்புலிகள் குறித்த சட்டரீதியான நிலையும்கூட கொழும்புக்கு ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது என்றார் அவர்.

ltte_logoவிடுதலைப்புலிகள் எந்த வடிவத்தில் நடமாடுகிறார்கள் என முன்னர் அறியப்பட்டார்களோ அவ்வடிவங்களில் இப்போது அவர்கள் இல்லை. ஆனால் வேறு கபட நோக்கங்கள் கொண்ட விதத்தில் அவர்கள் நடமாடி அணைந்து போய்க்கொண்டிருக்கும் பிரச்சனையை மீண்டும் துளிர்விடச் செய்வதில் அவர்கள் முனைவதால் மிகுந்த அவதானமாக இருந்து அம்மாதிரியான முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

இதையே தாம் அவுஸ்திரேலியாவுக்கு தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளதாக அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார். மேலும், புலிகளுக்கும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கும் உள்ள வெளிப்படையான தொடர்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொலாகம கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் என்பது புலிகளுடன் தொடர்பான ஒரு செயற்பாடு எனவும் ரோகித அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுக்குக் கூறியுள்ளாராம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.