தனக்கெதிராக செயற்ப்பட வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தூது

நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐக்கிய செயற்பாடொன்றை முன்னெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரிடம் இணக்கத்தைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் கோரியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

rajapaksa-313பொன்சேக்காவின் இராணுவ அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக இருப்பிற்கு ஏற்படப் போகும் ஆபத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன் அண்மையில் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருடன் இணக்கமொன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதுடன் இன்று காலை தம்மைச் சந்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க  தான் இணங்குவதாக ஜனாதிபதி மலிக் சமரவிக்ரமவிடம் தெரிவித்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.