இடம்பெயர் மக்களை சட்ட ரீதியான முறையில் குடியேற்றுவது தொடர்பில் அவுஸ்திரேலியா ரகசியத் திட்டம்

யுத்த இடம்பெயர் மக்களை சட்ட ரீதியான முறையில் குடியேற்றுவது தொடர்பில் அவுஸ்திரேலியா ரகசியத் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைவோரை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

australianfஅவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரொட்டின் விசேட பிரதிநிதி ஜோன் மெக்காத்தி இலங்கை அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, இந்தோனேஷிய கடற் பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலில் தஞ்சமடைந்துள்ள 78 இலங்கையர்களையும் மீள் குடியேற்றுவதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.
 
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குறித்த படகுப் பயணிகளை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.