அவுஸ்ரேலியா 78 அகதிகளையும் மீழ் குடியேற்றம் செய்ய இணக்கம்

அவுஸ்ரேலிய அரசாங்கம் ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ள 78 அகதிகளையும் அவுஸ்ரேலியாவுக்கு மீழ அழைத்து அவர்கள் உண்மையான அகதிகள் எனில் அவுஸ்ரேலியாவில் மீழ் குடியமர்த்த இணங்கியுள்ளது.

Oceanvikingஅவுஸ்ரேலியாவில் பிரதமர் ரட் கெவின் அவர்களுக்கு அந்த நாட்டு மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த படகினையும் அகதிகளையும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவுஸ்ரேலிய கடற்பகுதியில் இருந்து நாடு கடத்தி இந்தோனேசிய கடற்பகுதிக்குள்  விட்டனர். ஆனால் இந்தோனேசிய அரசு இந்த கப்பலை ஏற்க மறுத்தமை குறிப்பிடத்தகது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.