சரத் பொன்சேகா ஒருபோதும் நாட்டைக் காட்டிகொடுக்க மாட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் ஒத்துழைப்பு வழங்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

dalas_alakaperumal_inகுளியாபிட்டியில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவா இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முக்கிய யுத்தத்தில் ஜனாதிபதிக்கு தோள்கொடுத்த ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டை காட்டிக் கொடுக்கும் சக்திகளுடன் இணைந்து கொள்ள மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகளைப் போன்றே கடந்த காலங்களில் இலங்கையில் பெரும் பீதி நிலவியதாகவும், யுத்தம் முடிவுறுத்தப்பட்டதன் மூலம் இந்த பீதி களையப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத்தை முற்று முழுதாக இல்லாதொழித்த முதலாவது ஜனநாயக நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வரலாற்று காலம் முதல் பல யுத்த வீரர்கள் உருவாகியுள்ள போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.