வெலிக்கடை சிறையிலும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடை யில் கைகலப்பு இடம்பெற்றது. இக் கைகலப்பில் இரண்டு தமிழ் கைதிகள் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

velikadaiகடந்த வெள்ளிக்கிழமை மகஸின் சிறைச்சாலைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ்க் கைதிகள் நேற்றுக்காலை முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். அங்கு கடமையில் இருந்த சிறைக்காவலர்கள் பிற்பகல் 3 மணியளவில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் வற்புறுத்தினர் என்றும் கைதிகள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே அவர்கள் மீது காவலர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இக்கைகலப்பில் காயமடைந்த இரண்டு தமிழ்க் கைதிகள் சிறைச்சாலை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.