புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள்

ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது.

boycott1ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பணத்தை அவர்கள் இருக்குமிடத்திலேயே வைத்திருக்குமாறும், அல்லது ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வதை மட்டுமாவது தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர்களில் ஒருவரான திரு.செல்வன் இராசா அவர்கள் கூறுகையில், “நாம் ஸ்ரீலங்கப் பொருளாதாரத்தில் எந்த வகையில் பணத்தை இட்டாலும் அது எப்படியாவது ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்தைச் சென்றடைந்து தமிழர்களை வேரறுத்து அடிமைத்தளையில் தள்ளவே பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

“பல நல்லுள்ளம் உள்ள சீரிய நோக்கம் கொண்ட தமிழர்களும் தாங்கள் அறியாமலேயே பல வழிகளில் சிங்கள இனவெறி அரசின் பொருளாதார பலத்தைப் பலப்படுத்த உதவி விடுகின்றனர்” என்றார் திரு. இராசா. “முதலீடு செய்வதற்கு நல்லவொரு இடமாக இப்போது ஸ்ரீலங்கா தோன்றினாலும் அவ்வாறு செய்வது சிலோனைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்குப் பெருந்தீங்காக முடியும் என்ற உண்மையை எமது தமிழ் நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.”

தமிழர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டிய பல விடயங்களைத் திரு. இராசா தெரிவித்தார்.

“நாம் நமது பணத்தை ஸ்ரீலங்காவில் வைக்கக் கூடாது”, என்றார் திரு. இராசா. “நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் இதோ!”

  • ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்ய வேண்டாம்
  • கொழும்புவில் வீடுகள் வாங்க வேண்டாம்
  • ஸ்ரீலங்காவிலுள்ள வங்கி எதிலும் பணத்தை வைக்க வேண்டாம்
  • ஸ்ரீலங்காவிலுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்
  • ஸ்ரீலங்காவில் பங்குகளோ கடன் பத்திரங்களோ வாங்க வேண்டாம்
  • “யாழ்ப்பாண வளர்ச்சி நிதி” அல்லது மட்டக்களப்பு புதுப்பிப்பு அறக்கட்டளை” அல்லது “மறுவாழ்வு” என்பதைப் பெயரில் கொண்ட எந்த கவர்ச்சிகரமான சொற்றொடர்களைக் கண்டும் மயங்கி விடாதீர்கள். சுனாமிக்காக ஸ்ரீலங்கா அரசு வசூலித்த பணம் எதுவும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையவில்லை; அது கொழும்பிலேயே தங்கிவிட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம்.
  • துணிமணிகள், பலசரக்குப் பொருட்கள், ஸ்ரீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்லது வேறு எந்தப் பொருட்களையும் வாங்க வேண்டாம்

மேலும்,

சில்லறை வியாபாரியிடமும் (மொத்த விநியோகிப்பாளர் யாரென்று தெரிந்தால் அவரிடமும்) இப்பொருட்களை இனிமேல் விற்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.
பின்னர் திரு. இராசா தனது வாதத்தை வெளிப்படையாக முன்வைத்தார். “உலகத்தை ஸ்ரீலங்காவிலிருந்து முதலீடு செய்யாமல் தடுக்க முதலில் நாங்கள் ஒரு முன்மாதிரியை உருவாக்க வேண்டியுள்ளது: வெளிநாட்டில் வாழும் தமிழர்களாகிய நாம் தான் ஸ்ரீலங்காவிலிருந்து பணத்தை அகற்றி வேறிடத்தில் வைப்பதில் முதலாவதாக இருக்க வேண்டும். நாம் முதலில் இதனைச் செய்யாத வரையில் மற்றவர்கள் அதைச் செய்ய முன்வர மாட்டார்கள்.”

“தென் ஆப்பிரிக்காவில் உலக நாடுகள் முதலீடு செய்யாமல் தவிர்த்தது நல்ல விளைவைத் தந்தது. அதன் விளைவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு வளைந்து கொடுத்து இனஒதுக்கல் கொள்கையைக் கைவிட்டது. கொழும்பின் சிங்கள அரசாங்கம் தமிழர்களை அமைதியாகத் தங்கள் தாயகத்தில் எப்போது வாழ விடும் என்பது தெரியவில்லை, ஆனாலும் நாம்  நமது கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று கூறி திரு. இராசா முடித்துக் கொண்டார்

“ஒரு வாளியை நிரப்ப பல சிறு துளிகள் தேவைப்படுகின்றன, ஆனால் இறுதியில் வாளி நிறைந்து விடுகிறது”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.