தமிழீழத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை தொடர் கவனயீப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டம்

யுத்தம் காரணமாக இலங்கையின் வட பகுதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை விடுதலை செய்யுமாறு கோரி சர்வதேச மன்னிப்புச் சபை தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

Amnestyinternationalஉலகின் பல பாகங்களும் விசேட கவனயீப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிவித்துள்ளது.
 
இந்த விசேட கவனயீர்ப்புப் போராட்டம் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இடம்பெயர் முகாம் மக்களை விடுதலை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு விதமான கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
 
கனடா, நேபாளம், அமெரிக்கா, பிரான்ஸ், மொரிஸீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை வடபகுதி இடம்பெயர் மக்களை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
வீதிப் பேரணிகள், கவிதை வாசிப்பு, கையொப்பங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இடம்பெயர் மக்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலிறுத்தத் திட்டமிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.