விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால்; அது பயங்கரமானதாக உருவெடுத்ததர்க்கு காரணம் யார்?

வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பயங்கரவாதியாக ஆக்கியதும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக உருவாவதற்கும் அரச பயங்கரவாதமே காரணம் என ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய வணக்கத்திற்குரிய யோவான் தேவானந்த தெரிவித்துள்ளார்.

question_3dசுதந்திரத்திற்கு பின்னரும், சுதந்திரத்திற்கு முன்னரும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்தக் கட்சி அதற்கு உதவினாலும் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்க்கப்படவில்லை.
 
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, அதிகாரங்களைப் பரவலாக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் கிடைக்கவில்லை.
 
நாட்டில் காணப்பட்ட வேறுபாடுகளில் மாற்றங்கள் ஏற்படாத காரணத்தினால் தான் வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பும், தெற்கில் ஜே.வி.பி.யும் உருவாகின. இந்த இரண்டு அமைப்புக்கள் உருவாக்கத்தின் பிரதான பொறுப்பும் அரச பயங்கரவாதத்திற்கு இருந்தது.
 
எனினும், நாம் வாக்களித்து அரசாங்கத்தை தெரிவுசெய்ததால் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எமக்கும் முடியாது. அரச பயங்கரவாதத்தின் கடுமையான ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன என பலர் கூறியிருந்தாலும், ஜே.ஆர்.க்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் முன்னர் இருந்த ஆட்சியாளருக்கு இரண்டாம் நிலையில் இருக்கவில்லை.
 
சந்திரிக்கா குமாரதுங்க நல்லவர் எனக் கூறமுடியாது எனவும் சமாதானம் ஏற்பட்டுவரும்போது ஆட்சியிலிருந்து அரசாங்கத்தின் நான்கு அமைச்சுக்களை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அந்த அரசாங்கத்தை வீழ்த்தினார் எனவும் வணக்கத்திற்குரிய யோவானான் தேவானந்த தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.