இலங்கை அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடாக புதிய ஆயிரம் ரூபா தாள் வெளியிடப்பட்டுள்ளது

தமிழர்களின் தாயகபூமி இலங்கைப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா புதிய நாணயத் தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக  இலங்கை மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா பெறுமதியான நாணயத்தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

new1000_01

new1000_02

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத் தாளை  இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வழங்கி வெளியிட்டு வைத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.