சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை – சம்பிக்க

இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு எமது பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை எனசுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் மறுத்தநிலையில் அதனை ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை 1987 ஆம் ஆண்டைப் போன்று இந்தியாவுக்கு எதிராக வீதிப் போராட்டம் வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். அந்த அமைப்பினர் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்கின்றது. இது அந்நாட்டிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான செயற்பாடு என அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்களாக இருந்தாலும் சரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும்இ தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை. என உறுதியாக கூறியுள்ளார்.

இலங்கையின் திமிர் பேச்சுக்களை பாருங்கள் முழுதமிழர்படுகொலைகளை செய்து கொண்டு.. இப்பேச்சுக்களை உரிய முறையில் உலகிற்கு போகவேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்.. இதன் மூலம் இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளுக்கு உலகின் மூலம் நெருக்கடி கொடுத்து அடக்கலாம்..

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.