இலங்கை பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் இந்த நிலைமையில் இதன் போது, மனித உரிமைகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாமலேனும் பொருளாதார சரிவை சீர்ப்படுத்த வேண்டும் எனவும் இந்த பொருளாதார வீழ்ச்சியை சாதாரண பாதிப்பாக கருத முடியாது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்டெவிசஸ், மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் எடம்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

imf_loanஇலங்கையில் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்த நிலைமைகளுக்கு பொறுப்புக் கூறமுடியாது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைய இந்த பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்த நிலைமைகளினால் விசேடமாக ஏழை மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலையேற்படும்.
 
உங்களை போல் நானும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அனர்த்தத்தை நன்கு உணர்ந்துள்ளேன். முகாம்களில் உள்ள சிறுவர் மற்றும் குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்பற்ற நிலைமைகளை என்னாலும் தாங்கிகொள்ள முடியாது. எனினும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில் இந்த மக்கள் மேலும் மேலும் பாதிப்படையக் கூடும். ஏற்படப் போகும் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி, புனரமைப்பு பணிகளுக்கும், ஏழை மக்களை பாதுகாத்து, நிரந்தரமான சமூக செலவுகளை முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்புகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.
 
அரசாங்கத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட ஆழமான பேச்சுவார்த்தைகளின் பின்னர்,அரச அதிகாரிகள் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாரதூரமான மனித உரிமை மீறல்கள், இடம்பெயர்ந்துள்ள மக்களின் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறக் கூடியவர்களுக்கு துரிதமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவும் அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தமது அர்ப்பணிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விடயங்களை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் உன்னிப்பான ஆவதானிப்புகளை மேற்கொண்டு வருவதுடன் மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளின் கருத்துக்களை எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.