இலங்கை இனவாதிகளின் முட்கம்பி சிறையில் கடந்த மாதத்தில் மட்டும் 41 குழந்தைகள் இறந்துள்ளன

வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.

Cambidpnerudal1இவ்வாறு உயிரிழந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
 
உரிமை கோர எவரும் இல்லாத நிலையில், இடம்பெயர்ந்தோர் முகாமில் உயிரிழந்த முதியவர்களின் சடலங்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தாகவும் வைத்தியசாலைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.