இலங்கைப் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது – ரணில்

இலங்கையின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாகவும், பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

ranilசர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக்யூ ஸ்ட்ராஸ் கான் அண்மையில் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
 
இலங்கைப் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுமாயின் அதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
எனினும், இலங்கையில் துரித பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் பொருளாதாரம் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.