மற்றுமொரு அகதிகள் படகு ஆஸி. படையினரால் மீட்பு

அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸி. அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கித் தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ள 43ஆவது அகதிகள் படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.கண்காணிப்பு விமானம் மூலம் இந்த படகு வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடற்படையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

அஷ்மோர் தீவுகளிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் இந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டது.படகில் 41 பயணிகளும், 2 ஊழியர்களும் இருப்பதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இவர்களைக் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்று அங்கு உடல் நலப் பரிசோதனை, பாதுகாப்பு சோதனை, அடையாளச் சோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்றும் அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.