ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவதறகான சாத்தியங்கள் குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச விருப்பம் கொணடுள்ளதாக தெரியவந்துள்ளது.

mahinda2தமது அதிகாரங்க்ள மற்றும் அரசாங்க இயந்திரம் பாதுகாப்பு படைத்தரப்பு ஆகியவற்றின் உதவியுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரின் நோக்கம் என்று முக்கிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் எதிர் கட்சிகளின் கூட்டணி பலமான நிலையில் இருப்பதால் அதில் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவியவர்கள் என்பதால் தேர்தல்களின் வெற்றி பெறும் சந்தர்பம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் பலரும் ராஜபக்ச தரப்புடன் முரண்பட்டு  நிற்பதால் பொதுத் தேர்தல் பணிகளில் அவர்களை முழு வீச்சுடன் ஈடுபடுத்த முயடிhத நிலை காணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தனக்குள்ள மக்கள் செல்வக்கு மூலம் வெற்றி பெற முடியும் என்பதே ஜனாதிபதியின் எண்ணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.